Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 27 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிப்பதில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கைக் கடைப்பிடித்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தியச் சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், நாளை மறுதினம் (29) முற்பகல் 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக, முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியத்தின் வர்த்தகச் சங்கத்தினர், பஸ் சங்கத்தினர், பொது அமைப்பினர், பொதுசந்தைச் சங்கத்தினர், கிராம அமைப்பினர் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாத நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றது.
இதையடுத்து, டிசெம்பர் மாதம், மூன்று மாத காலங்களுக்கென வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த வைத்தியரை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.சுகந்தன், எந்தக் காரணமுமின்றி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில், இவ்வருடம் ஜனவரி 03ஆம் திகதி தொடக்கம் வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதன் பின்னர் பதிவு செய்யப்படாத வைத்தியர் ஒருவர் ஒரு நிறுவனத்தின் நிதி உதவியுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், ஒரு வைத்தியருக்கு கீழேயே பணிபுரிய வேண்டும்.
இந்நிலையில், ஜனவரி 20ஆம் திகதியன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இது குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதும் ஜனவரி 23ஆம் திகதியன்று, பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு தீர்வு கிடைக்காத நிலை தொடர்ந்தும் இருப்பதன் காரணத்தாலேயே, முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றிய வர்த்தகச் சங்கம், பஸ் சங்கம், பொது அமைப்புகள், பொதுசந்தைச் சங்கம், கிராம அமைப்புகள் என்பன ஒன்றிணைந்து, நாளை மறுதினம்(29), முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிமனைக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago