Niroshini / 2021 நவம்பர் 03 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் தற்போது 3ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சுகாதார வழி முறைகளை தொடர்ச்சியாக கடைப்பிடித்து தீபாவளி மற்றும் அதனை தொடர்ந்து வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகளை மிக இறுக்கமாக கடைப்பிடித்தால் மட்டுமே, மீண்டும் ஏற்படக்கூடிய கொரோனா தொற்று நிலமையை தவிர்த்துக் கொள்ள முடியும் என, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை (02) புதிதாக 22 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 7 தொற்றாளர்கள், பண்டிவிரிச்சான் வைத்தியசாலையிலும் 5 தொற்றாளர்கள், நானாட்டான் வைத்தியசாலையிலும் 4 தொற்றாளர்கள், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
கடந்த ஒக்டோபர் மாதம் நாள் ஒன்றுக்கு 8 அல்லது 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று நாள்களாக நாள் ஒன்றுக்கு 17 தொற்றாளர்கள் வீதம் குறித்த தொற்று அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும், அவர் கூறினார்.
பயணத்தடைகளின் தளர்வும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றுவதில் மக்கள் காட்டுகின்ற அசமந்தபோக்கு ஆகிய காரணங்களால், மீண்டும் ஒரு தொற்று பரவும் நிலை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
'தீபாவளி மற்றும் அதனை தொடர்ந்து வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிமுறைகள் மிக இறுக்கமாக கடைபிடித்தால் மட்டுமே மீண்டும் ஏற்படக்கூடிய தொற்று நிலைமையை தவிர்த்துக் கொள்ள முடியும்.
'அத்துடன், பொது மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஓரளவுக்கு முடிவடைந்துள்ளது' என்றார்.
23 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
38 minute ago