2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சுகாதாரத் துறையை மேம்படுத்த திட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், மேலதிக தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கும் மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் இடையில் சுகாதார இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று  (6) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ct scanner இயந்திரம், தேவையான கருவிகள் மற்றும் ct scannerக்கான 10 மில்லியன் ரூபாய் செலவிலான கட்டடம் ஆகியவற்றை வழங்குவதற்கு அமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன், சிலாவத்துறை வைத்தியசாலைக்கு வைத்தியர், தாதியர், வைத்திய ஆலோசகர் விடுதியை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நானாட்டான், அடம்பன் உள்ளிட்ட மேலும் பல வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மருத்துவர் எஸ்.என் ஹில்ரோய் பீரிஸ், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் ஒஸ்மன் டேனி, வடமாகாண சுகாதார பிரதி பணிப்பாளர் மருத்துவர் தெழிலன், உயிரியல் வைத்திய பொறியியலாளர் நிரோஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .