2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினத்தை துக்க நாளாக அனுஷ்டிக்கவும்

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பரமணியம் பாஸ்கரன்

இலங்கையின் சுதந்திர தினத்தை, துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு,  வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் விடுதியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்கள், போரின் போது இடம்பெற்ற விடயங்களை தாம் கேட்கவில்லையெனவும் தமது உறவுகள் காணாமல் போனதற்கான பொறுப்பு கூற வேண்டிய ஜனாதிபதி, இன்று அப்பட்டமான பொய்யை கூறுவதாகவும் தெரிவித்தனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தைத் துக்க நாளாகக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்திய அவர்கள், அன்றைய தினம்  முற்பகல் 10 மணிக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கோர, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் இருந்து பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினர்.

இதில், அனைவரும் கட்சி பேதமின்றி, அணிதிரண்டு, ஆதரவையும் பங்களிப்பையும்ம் வழங்குமாறும், அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .