2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் பயணம் ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கிய சுதந்திர தின சமாதான சைக்கிள் பயணமொன்று, இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தச் சைக்கிள் பயணத்தை, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து, இன்றுக் காலை 8.15 மணியளவில் ஆரம்பித்து வைத்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர், ஜனவரி 28ஆம் திகதியன்று, கொழும்பில் இருந்து ஆரம்பித்த இந்த “சுதந்திர தின சமாதான சைக்கிள் பயணம்” நேற்று  (29) மாலை மன்னாரை வந்தடைந்தது.

இந்த நிலையிலேயே, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குறித்த சைக்கிள் பயணத்தை, இன்று (30) மாவட்ட ச் செயலாளர் ஆரம்பித்து வைத்தார்.

இந்தச் சைக்கிள் பயணம், யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக்குச் சென்று, அங்கிருந்து  முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாகச் சென்று, அங்கிருந்து பெப்ரவரி 4ஆம் திகதியன்று, மீண்டும் கொழும்பைச் சென்றடையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X