2025 மே 05, திங்கட்கிழமை

’சுத்தமற்ற சந்தையால் அபாயம்’

Niroshini   / 2020 நவம்பர் 16 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான மாங்குளம் பொதுச்சந்தை வளாகம் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வருவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், குறித்த இடத்தில் நுளம்பு பெருகி நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் கூறினர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அப்பகுதி மக்கள், மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கி நிற்பதால் அங்கு நுளம்புகள் உற்பத்தியாக கூடிய சூழல் காணப்படுவதோடு அங்கு குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாது கிடைப்பதாகவும் நீர் தேங்கி நிற்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் நோய்கள் பரவக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினர்.

அத்தோடு குறித்த பொதுச்சந்தை வளாகத்தில் 58 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று வரை சுமார் இரண்டு வருடங்களாக  இயங்காத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

புதிய  நிலையத்தை அமைத்து விட்டு அந்த இடம் வெறிச்சோடி காணப்படுவதாகவும் எனவே, குறித்த பஸ் நிலையத்தின் சேவைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X