Niroshini / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (26) மாலை 3.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை- சோமசுந்தரம் வீதி பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞனே, இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
கௌதாரிமுனைக்கு ஆனைக்கோட்டையில் இருந்து 17 பேர் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.
இதேபோல், குருநகரில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், இரு குழுக்களுக்கு இடையிலும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கம், மோதலாக மாறிய நிலையில், குறித்த இளைஞன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த இளைஞனை, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, குருநகரில் இருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago