Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியால், வவுனியா நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை, அரசாங்க பாடசாலை அதிபரொருவர், நேற்று (25) இரவு கிழித்தெறிந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக, அண்மையில் அரச அதிகாரிகளின் சிபாரிசுடன் மதுபானசாலையொன்று திறக்கப்பட்டிருந்தது.
குறித்த மதுபானசாலை மக்கள் குடிமனைக்கு மத்தியிலும் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்துக்கும் முன்பாக திறக்கப்பட்டிருந்ததை கண்டித்து, வவுனியா பொது அமைப்புகள், அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.
வவுனியா அரசாங்க அதிபர் குறித்த மதுபானசாலையை அந்த இடத்தில் இருந்த அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
எனினும், மதுபானசாலை அகற்றப்படாத நிலையில், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினர், ஜனநாயக வழியில், சுவரொட்டி போராட்டமென்றை நேற்று (25) முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகளை இரவிரவாக இளைஞர்கள் ஒட்டிவந்த நிலையில், ஓட்டோ ஒன்றில் வந்த வவுனியாவில் உள்ள அரச பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், மற்றுமொருவருடன் இணைந்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்துள்ளார்.
இந்நிலையில் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாக இளைஞர் முன்னணியினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த முன்னணியினர், ஓட்டோவை வழிமறித்து, “ஏன் சுவரோட்டிகளை அகற்றுகின்றீர்கள்” என, அவரிடம் வினவினர்.
அத்துடன், இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கும் தகவலை வழங்கியதையடுத்து, குறித்த அதிபர் அவ்விடத்தில் இருந்து தன்னுடன் வந்தவருடன் ஊட்டோவைக் கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் ஓட்டோவை பார்வையிட்ட இளைஞர்கள், அதனுள் கத்தி, மா, சில சுவரொட்டிகள் இருப்பதை கண்டனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025