2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

Niroshini   / 2021 ஜூன் 13 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில், நேற்று (12), சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இவ்வேளையில், ஒன்றுகூடி, சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வருகின்றமை குறித்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த கிளிறொச்சி பொலிஸார், குறித்த 14 பேரையும் பணத்தடன் கைதுசெய்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .