2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

செய்கை மேற்கொள்ள அனுமதிக்குமாறு மகஜர்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பேறாற்று, 1200 ஏக்கர் வயல் நிலங்களில் இம்முறை சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ள அனுமதிக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு பேறாறு சிற்றாறு நிர்ப்பாசனத்தில் செய்கை பண்ணப்படும் வயல் நிலங்களில் முத்தயன்கட்டு குளத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு போதியளவு நீர்வசதி இருந்தும் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை செய்ய இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த 1200 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு முல்லைத்தீவு கமநல உதவி ஆணையாளருக்கு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பினூடக  மகஜர் ஒன்றை விவாசாயிகள் கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .