Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 19 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சபையில் பணிபுரியும் ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தில் சபை உத்தியோகத்தர்களை சபை அமர்விற்குள் அழைத்த வவுனியா நகரசபையின் செயலாளர், இது தொடர்பான செய்தியையும் பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது நகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலரது இடமாற்றம் மற்றும் சம்பளவிடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபையின் செயலாளர், குறித்த ஊழியர்களின் விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை முன்வைத்ததுடன், சபையில் பணிபுரியும் 8க்கும் மேற்பட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களை சபை அமர்வுக்குள் அழைத்து, கருத்துகளை முன்வைத்ததுடன், தாம் அனைவரும் இடமாற்றமாகி செல்லவேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தார்.
எனினும் சபை ஊழியர்களை அழைத்து வந்து அவர்களை இங்கு விசாரணை செய்யத்தேவையில்லை என அனேகமான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததுடன், ஊழியர்களை அனுப்புமாறும் தெரிவித்தனர்.
எமது பக்க நியாயத்தை நிரூபிப்பதற்காகவே உத்தியோகத்தர்களை சபைக்குள் அழைத்ததாக செயலாளர் தெரிவித்ததுடன், உத்தியோகத்தர்கள் வருகைதந்த விடயத்தை செய்திகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், நகரசபை உறுப்பினர்கள், செயலாளர் தாமும் உத்தியோகத்தர்களும் இடமாற்றமாகி சென்றுவிடுவோம் என எச்சரித்ததன் பின்னர் உறுப்பினர்கள் பலரும் அடக்கமாகியிருந்தனர்.
எனினும் உத்தியோகத்தர்களை சபைக்கு உள்ளே அழைத்தமை உள்ளுராட்சி அமைப்பின் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே இருப்பதாக பலரும் இதன்போது விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
3 hours ago