2025 மே 22, வியாழக்கிழமை

செல்வபுரத்தில் பற்றியெரிந்த பனங்கூடல்கள்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில், நேற்று (13),  மக்கள் குடியிருப்புக்கு அண்மையில் பனங்கூடலில் ஏற்பட்ட தீ விபத்து, அதிகளவான பனை மரங்கள் எரிந்துள்ளதுடன், மக்கள் உபகரணப் பொருள்கள் சிலவும் எரிந்து சேதமடைந்துள்ளன.

 இந்நிலையில் இந்த தீவிபத்து தொடர்பில் அருகில் உள்ள மக்கள், பொலிஸாருக்கும் படையினருக்கும் தெரியப்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த படையினர், பொலிஸார், கரைதுறைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாகவே, பனைமரக்கூடல்கள் அடிக்கடி தீபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X