2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘சோதனை நடவடிக்கைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காது’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

பெண்கள் கொண்டுவரும் பொதிகளை பெண் இராணுவத்தினரே சோதனை செய்கின்றனரெனத் தெரிவித்த இராணுவத்தினர், இந்தச் சோதனை நடவடிக்கைகள் நீண்ட காலத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்படமாட்டாதெனவும் கூறினர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமயிலான குழுவொன்று, ஓமந்தை இராணுவ சோதனை சாவடிக்கு, நேற்று (08) சென்று, அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தது.

இதன்போது, அக்குழுவினர், அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரிடம் சோதனைகள் குறித்து வினவியபோதே,  இராணுவத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்கள், தாங்கள் பஸ்களை நிறுத்தியே பொதிகளை சோதனை செய்வதாகவும் இந்தச் சோதனை நடவடிக்கைகளின் மூலம் பல முறை போதைபொருள்கள் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

அத்துடன், பெண்கள் கொண்டுவரும் பொதிகளை, பெண் இராணுவத்தினரே சோதனை செய்கின்றனரெனத் தெரிவித்த அவர்கள், இதன்போது பொலிஸாரும் உடன் இருக்கின்றனரெனவும் வேகமாகச் சோதனை செய்துவிட்டு, அவர்களைப் பஸ்களில் ஏற்றிவிடுவதாகவும் கூறினர்.

போதைபொருள் பயன்பாட்டையும் கடத்தலையும் தடுப்பதற்கே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதெனவும் இந்தச் சோதனை நடவடிக்கைகள் நீண்ட காலத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்படமாட்டாதெனவும், இராணுவத்தினர் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .