Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
எஸ்.என். நிபோஜன் / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயத்தை முன்னிட்டு செப்பனிடப்படாத வீதிகள் தற்காலிகமாக செப்பனிடப்படுகின்றன.
கிளிநொச்சி அம்பாள்குளத்தில், 111 மில்லியன் ரூபாய் செலவில் கடந்த அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, நீண்ட காலமாகத் திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால், நாளை மறுதினம் (14) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி செல்லுகின்ற பிரதான பாதைக்கு அருகில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ள குறுக்கு வீதிகள் கிறவல் இடப்பட்டு தற்காலிகமா செப்பனிடப்படுகின்றது.
கடந்த ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதியின் வருகையின் போது அவசர அவசரமாக வீதிகள் செப்பனிடப்படுவது, இவ்வாட்சிக் காலத்திலும் தொடர்கின்றது என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
2 hours ago