Freelancer / 2022 நவம்பர் 19 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தில் இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவு கருவிகளை (வீடியோ) கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கலாசார மண்டபத்தில் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு காலை 11 மணிக்கு இடம்பெறவிருந்தது.
இதற்காக செய்தி சேகரிக்க வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு கருவிகளுடன் (வீடியோ) சென்றிருந்தனர்.
இந் நிலையில் குறிப்பிட்ட ஊடகமொன்றின் ஊடகவியலாளருக்கு ஒளிப்பதிவு கருவிகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் நிகழ்வை பார்வையிட மாத்திரம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த ஊடகவியலாளர் ஒளிப்பதிவு கருவிகளை கொண்டு செல்ல முடியாதெனில் தான் வெறுமனே சென்று நிகழ்வை பார்வையிட தேவையில்லை என தெரிவித்து ஜனாதிபதியின் செய்தி சேகரிப்பல் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago