2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியை சந்திக்க பட்டதாரிகள் தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து, தமக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதென, வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று, வவுனியா F.M.E ஊடகக் கல்லூரியில், இன்று (30) நடைபெற்றது.

பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ந.வினோதன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், வேலையற்ற பட்டதாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன், எதிர்வரும் மாதமளவில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து, தமது வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில், 50க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X