2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘ஜெயபுரம் வயற்காணிகளை மக்களுக்கு வழங்கப்படும்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பரிமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி, ஜெயபுரம் வடக்கு பகுதியில் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள விவசாயிகளின் வயற்காணிகளை, அந்த மக்களுக்கே உரித்துடையது என்றும் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நேற்று (06) உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற அலுவலகத்தில், உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குறித்த காணிகளை மேற்படி மக்களுக்கே வழங்க வேண்டும் என்றும் இக்கலந்துரையாடலில் முடடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்  கலந்துரையாடலின் முடிவில் தொடர்புடைய தரப்பினரிடையே இணக்கம் காணப்பட்டு குறித்த வயற்காணிகளை உடனடியாக அளவீடு செய்து ஒரு மாத  காலத்துக்குள் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டதாகவும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .