2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மூடப்படும் அபாயம்

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி - அறிவியல் நகர்ப் பகுதியில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGT), திறமையற்ற நிர்வாகக் கட்டமைப்பு, ஆளணிப் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, கல்வியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த பயிற்சி நிறுவனத்துக்கென, பாரிய அளவிலான காணிகள் ஒதுக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய துறைசார் விரிவுரை மண்டபங்கள், வெளிமாவட்ட மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில், மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற தவணைப் பரீட்சைகள்கூட, திட்டமிட்ட வகையில் நேர சூசிக்கு அமைவாக நடைபெறுவதில்லையெனவும் தாமதமாக நடைபெற்ற பரீட்சைப் பெறுபேறுகள் கூட, ஆறு மாதங்களின் பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால், சித்திபெறாத மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  

மூன்று வருடங்களாக இயங்கிவருகின்ற இந்த இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம், NVQ தரம் 5ஐப் பூர்த்திசெய்த எந்தத் திணைக்கள மாணவர்களுக்கும், இதுவரை தொழில் வாய்ப்பும் வழங்கவில்லை என்று, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

NVQ தரம் 4ஐப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில், இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்றதற்கான குறியீடோ, சொல்லோ இல்லை என்றும் 

இதனால், தாங்களாகவே தொழில் வாய்ப்பைத் தேட முயற்சிக்கின்ற மாணவர்களுக்கு கூட, தொழில் வாய்ப்பைப் பெற முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.  

இவ்வாறான பிரச்சினைகள், ஆளணிப் பிரச்சினைகளால், எஞ்சியிருந்த 50 சதவீதமானவர்கள், தமது கற்றல் செயற்பாடுகளைக் கைவிட்டுள்ளனர் என்றும் சுமார் 90 விரிவுரையாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி நிறுவனத்தில், இப்பொழுது 40 விரிவுரையாளர்கள் மாத்திரமே கடமையில் உள்ளதாகவும் எனவே, இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறும் கல்வியலாளர்களும் பாதிக்கப்பட்ட மாணவர்களும் கோருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .