Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை நடத்தக்கூடாது என வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானத்தை அவர் தெரிவித்திருந்தார்.
தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், நகரசபையின் உப தலைவர் உட்பட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது, சுகாதார வசதிகள், காற்றோட்ட வசதிகள், நகரசபையில் பதிவு செய்தல், இரவு நேர வகுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதன்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதித்தீர்மானமாக ஞாயிற்றுக்கிழமைகளில் உயர்தர வகுப்புகள், சாதாரணதர வகுப்புகள், புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வகுப்புகள் தவிர்ந்த வேறு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது எனவும், வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நகரசபையில் பதிவு செய்யப்படவேண்டும், மாலை 7.30 மணிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் எவ்வகையான வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது, காற்றோட்ட வசதிகள், மலசலகூடங்கள் உட்பட சுகாதார வசதிகள் போதுமான வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந் நிலையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து இந் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு நகரசபை தலைவரால் அறிவிக்கப்பட்டது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025