2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

துண்டுகளாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை

George   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் விவசாயி ஒருவர் துண்டுதுண்டாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது  62) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  அடையாளம் காணப்பட்டுள்ளது.

துண்டுகளாக  வெட்டி, எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன்  தொடர்புடையவர்  என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த  நபர், இந்தியாவுக்குத்  தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நீதவானின் விசாரணையைத் தொடர்ந்து, சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸார்  இணைந்து  முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .