2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தீபாவளி பொருட்களை தின்று காட்டு யானைகள் அட்டகாசம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நவரத்தினம் கபில்நாத்

உலகவாழ் இந்து மக்கள் தீபாவளி திருநாளை இன்றைய தினம் வெகுவிமர்சியாக கொண்டாடிய நிலையில், தீபாவளி கொண்டாடத்துக்காக வாங்கி வைத்திருந்த பொருட்களை காட்டுயானைகள் தின்று அட்டகாசம் புரிந்துள்ள சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. 

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நித்தியநகர் கிராமத்தில் மூன்று வீடுகளை காட்டு யானைகள், நேற்று திங்கட்கிழமை (09) இரவு முற்றாக சேதப்படுத்தியதுடன் தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பொருட்களையும் தின்று தீர்த்துவிட்டன என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். 

இக்கிராமத்துக்கு காட்டு யானைகள் தொடர்ச்சியாக வந்து வீடுகளை சேதப்படுத்துவதாகவும் அவை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தினாலும் அவர்கள் இதுவரையிலும் கணக்கில் எடுக்கவில்லை என்றும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர். 

இதேவேளை, பலாங்கொடை, மைலவல பகுதியில் காட்டு யானையின் தாக்கத்துக்குள்ளாகி 49 வயதான வடனகேவாஹே சுமதிபால என்பவர் நேற்று திங்கட்கிழமை (09) இரவு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.  

சடலம், ஹம்பெகமுவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X