Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
திருடப்பட்ட மாடுகள் மன்னார் பெரியகருசல் பொது விளையாட்டு மைதானத்துக்கு பின் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வரும் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பசு திருடப்பட்டு இன்று(7) வெள்ளிக்கிழமை அதிகாலை சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிலையில், அதன் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பசுவின் கன்;றுக்குட்டி வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட பசுவின் உரிமையாளர், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
அப்பகுதியில், ஏற்கெனவே பல மாடுகள் வெட்டப்பட்ட தடயங்கள் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
06 Jul 2025