2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தொற்றுநோய்கள் உருவாகும் அபாயம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, முழங்காவிலில் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்பதனால் தொற்றுநோய்கள் உருவாகக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது.

ஏ-32 வீதியில் யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்குமிடையிலான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் முழங்காவிலில் தரித்துச்செல்கின்றன.

மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் ஐந்து வரையான உணவகங்கள் உள்ளன. பெருமளவு பயணிகள் நாள்தோறும் ஒன்றுகூடிச் செல்லுமிடத்தில் அமைந்துள்ள உணவகங்களுக்கு முன்னால் மழை வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக உணவகங்களுக்குள் இலையான்களின் தொல்லை கூடுதலாகக் காணப்படுகின்றது.

அத்துடன், முழங்காவில் உப நகரத்தில் மழைவெள்ளம் பாய்ந்தோடுவதற்கான வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. எனவே, மழைவெள்ளம் பாய்ந்தோடுவதற்கான வாய்ப்புகளும் இல்லை.

இதனால் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X