2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தாழ்பாலம் அரிப்புக்குள்ளாகின்றது

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் தாழ்பாலம் மழையினால் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக அக்கராயன் கிராம அலுவலர் பசுபதி சபாரத்தினம், தெரிவித்துள்ளார்.

'கடந்த ஏப்ரல் மாதத்தில் பெய்த பெரும் மழையினால் அக்கராயன்குளம் வான்வெள்ளம் நிரம்பி வீதியினைக் குறுக்கறுத்து தாழ்பாலம் ஊடாக பாய்ந்ததன் காரணமாக, இத்தாழ்பாலப் பகுதியில் பெருமளவிலான மண்ணரிப்பு ஏற்பட்டு போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டது.

அதன் பின்னர், டிப்பரினால் மண் கொண்டுவந்து கொட்டப்பட்டு, போக்குவரத்து நடைபெற்ற நிலையில் தற்போது பெய்யும் மழையினால் இப்பாலப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராம மக்கள் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் தெரிவிக்கவுள்ளேன்' என்றார்.

இத்தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றுமாறு தொடர்ச்சியாக அக்கராயன் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இப்பாலம் வழியான போக்குவரத்துகள் துண்டிக்கப்படுகின்றபோது நான்காயிரம் வரையான மக்கள் பாதிக்கப்படுவார்கள்; என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .