2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தேவைகளை நிறைவேற்றுவதற்கு ‘புலம்பெயர்ந்தவர்கள் முன்வர வேண்டும்’

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் பல்வேறு தேவைகளுடைய மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்தும் முன்வர வேண்டும்” என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.  

முன்னாள் போராளிகளின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் இருவரின் நிதியுதவியுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, திக்கம் சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (06), தமிழரசுக் கட்சியின் மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.   

தொடர்ந்து கூறுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகளவான மாணவர்கள், பல்வேறு தேவையுடையவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும். சில இடங்களில் கிடைக்கப்பெற்ற உதவிகள் மோசடி செய்யப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.  

இந்நிகழ்வில், 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .