2025 மே 05, திங்கட்கிழமை

தண்ணீரூற்றில் காவலாளியின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 01 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன, செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு-  முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த இராமையா மகாதேவன் (வயது 54) என்பவரே, இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவலாளியின் உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X