Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
விசைப்படகு பழுதானதால், கடந்த மூன்று நாள்களாக மன்னார் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை மீட்டெடுத்த இலங்கைக் கடற்படையினர், விசாரணையின் பின்னர் அவர்கள் நால்வரையும் பழுதான விசைப்படகுடன் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சனிக்கிழமை (27) காலை, இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க வந்த இந்த மீனவர்கள், அன்றிரவு வரை நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதன்போது, விசைப்படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, படகு பழுதடைந்தது.
இவ்வாறு பழுதடைந்த படகு, கடல் சீற்றம் காரணமாக, இலங்கை - மன்னார் கடல் பகுதிக்குள் சென்றடைந்தது.
இந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுகிழமை (30) மாலை, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கைக் கடற்படையினர், பழுதடைந்த படகுடன் மன்னார் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்த மீனவர்களை மீட்டு, விசாரணைகளின் பின்னர் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
16 minute ago
31 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
32 minute ago
1 hours ago