Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
தனது இனத்துக்கு ஒரு முகத்தையும் தமிழினத்துக்கு ஒரு முகத்தையும் நல்லாட்சி அரசு காட்டுகிறதென, வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, நேற்று (02) முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், போர்காலத்தில் குற்றங்கள் என்று சொல்லி பிடிக்கப்பட்ட அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்கள் மீதான விசாரணை நடத்தி புனர்வாழ்வு அளித்து அவர்கள் நல்லாட்சியில் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
அத்தோடு, 9 ஆண்டுகள் கடந்த நிலையில் கூட அவர்கள் விடுதலை செய்யப்படாமல் பலர் அங்கே தவித்துக்கொண்டும் குடும்பங்களை எண்ணி உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்கள் போராட்டங்களுக்கு மரியாதை இல்லாத நிலையினைதான் நல்லாட்சி அரசு ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்ததோடு, வீதிகளில் நின்று ஒவ்வொரு விடயத்திற்கும் போராடுகின்றோம். தனது இனத்திற்கு ஒரு முகத்தினையம் தமிழ் இனத்திற்கு ஒரு முகத்தினையும் காட்டிக்கொண்டு நல்லாட்சி அரசானது வேடிக்கையான விளையாட்டுக்களை செய்துகொண்டிருக்கின்றது என கூறினார்.
மேலும் சரியான நல்லாட்சியாக இருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் இவ்வாறான கோரிக்கையினையே அரசியல் கைதிகளும் விடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றதோடு, இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் சாதாரணமாக இனத்திற்காக போராடியவர்களை பல ஆண்டுகாலமாக சிறை வைத்துக்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல் எனவும், ஒரு நல்லாட்சி அரசு என்ற பெயருடன் நீங்கள் இருப்பதாக இருந்தால் நல்லாட்சி அரசிற்குரிய கோட்பாடுகளை மதித்து செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .