2025 மே 05, திங்கட்கிழமை

தனது காதல் கதையை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியரை இடம் மாற்றியதை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலையினை மூடி இன்று (16) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்து வரும் ஒரு ஆசிரியர் இந்த மாணவர்களுக்கு தேவை இல்லை என்றும் வலியுறுத்தி வந்துள்ளார்கள். 

குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு அடிப்பது மற்றும் தனது காதல் கதையினை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுமான செயற்பாடு, மாணவர்களை காதல் திசையில் இழுக்கும் செயற்பாடு என குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து முல்லை வலயக்கல்வி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆசிரியர் பாடசாலைக்கு தேவை இல்லை என்றும் தேவையான ஆசிரியருக்கு இடம்மாற்றம் வழங்கியதை இரத்துசெய்;து அவரை மீண்டும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தியும் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அலுவலகத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் உரையாடியுள்ளார். இதன்போது அடுத்த வாரத்தில் குறித்த ஆசிரியரை மீளவும் பாடசாலைக்கு பணிக்கு அமர்த்துவதாக உறுதியளித்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்களால் போராட்டம் கைவிடப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X