2025 மே 05, திங்கட்கிழமை

’தனி கிராம சேவையாளர் பிரிவு வேண்டும்’

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - வலைப்பாடு கிராமத்துக்கென, தனியான கிராம சேவையாளர் பிரிவொன்றை உருவாக்கி தருமாறு, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம், வலைப்பாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கஜன் இராமநாதன் எம்.பி, வலைப்பாட்டுக்கு, இன்று (02) விஜயம் மேற்கொண்டு, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய போதே, அப்பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் தொகை இல்லாத கிராமமான பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில், 400 குடும்பங்கள் உள்ளன.

இந்தக் கிராமத்தை தனியான கிராம சேவையாளர் பிரிவாக மாற்றி தருமாறு, அப்பகதி; மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைனை கேட்டறிந்த அங்கஜன் எம்.பி, எல்லை நிர்ணய குழுவிடம் குறித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுமெனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X