Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கட்டண விவர பட்டியலை, தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் காட்சிப்படுத்துமாறு, திணைக்கள அதிகாரிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உத்தரவு பிறப்பித்தார்.
காணி மாவட்டப் பதிவகத்தில், காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவைக்குரிய கட்டண விவரங்கள், தனி சிங்கள மொழியில் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில், அப்பகுதி தமிழ் மக்களால், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு, இன்று (18) நேரடியாகச் சென்ற அமைச்சர், வவுனியா பிரதேசம், இரு மொழிகள் பேசும் மக்கள் வாழும் பிரதேசம் என்பதால், இந்தக் கட்டண விவரப் பட்டியலை, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் காட்சிப்படுத்துமாறு, திணைக்கள அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago