2025 மே 08, வியாழக்கிழமை

தனிமைப்படுத்தலுக்கு சென்ற பஸ் விபத்து

Niroshini   / 2021 ஜூன் 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தை, பனிக்கன், நீராவிப் பகுதியில், இன்று (08) அதிகாலை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திம்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி - பூனநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த போதே, பனிக்கன் - நீராவிப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தப் பஸ்ஸில், 7 பேர் பயணம் செய்த நிலையில், எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக, ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X