2025 மே 09, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 13 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டப் படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த நபர் ஒருவர், பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரினரால், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை - இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில், திருகோணமலை - மூதூர் பகுதியில் வெடிபொருளுடன் கைதான இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதாவது, குறித்த நபர் கட்டாரில் வசித்து வந்த நிலையில், கடந்த 14 நாள்களுக்கு முன்னர் கட்டாரில் இருந்து நாடு திருப்பினார்.

இவ்வாறு நாடு திரும்பிய குறித்த நபர், தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு மாவட்ட படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்றுடன், அவரது 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததை அடுத்து, வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், அவரை விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X