Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 17 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - சாந்தசோலை பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞன்; ஒருவருக்கு, அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, குறித்த இளைஞனின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் நேரடி தொடர்பைப் பேணிய அயல் வீட்டைச் சேர்ந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த அயல் வீட்டைச் சேர்ந்த இருவரும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியில் உலாவித் திரிந்ததுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்க தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர், விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் காலம் நிறைவுபெற்றதன் பின்னர், வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சுகாதார பரிசோதகர் குழுவினர் பணித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago