Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 02 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம், இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம், இன்றுக் காலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது, தீப்பற்றி எரிவதைக் கண்ட நிலையில், உடனடியாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால், பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த கல்வி நிலையப் பகுதிக்குச் சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்து குறித்த கல்வி நிலையத்தின் வகுப்பறை கூடம் மீது வீசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இன்போது, தீ ஏற்பட்டு குறித்த வகுப்பறையின் உள்ளக பகுதிகளில் மரத்தினாலான பகுதிகள் எறிந்துள்ளது.
உறுகிய நிலையில் இரண்டு பிளாஸ்ரிக் போத்தல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்திய நிலையில் அவசர பொலிஸ் சேவை 119 அழைப்பை ஏற்படுத்திய போதும், அவர்கள் உரிய நேரத்துக்கு வரவில்லை என குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை கிராம அலுவலகர்களும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலமையை அவதானித்தனர்.
அண்மைக் காலங்களாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு இடையில் தொடர் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025