Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காணிக்குள் முசலி பிரதேச சபையினர் அனுமதியின்றி உட்பிரவேசித்து, அக்காணியை அடாத்தாகப் பிடித்துள்ளதாக, முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் தொடர்ந்துரைத்த அவர், தனியாருக்குச் சொந்தமான காணியை, காணி உரிமையாளரின் எவ்வித அனுமதியையும் பெறாமல், கடந்த 21ஆம் திகதியன்று, முசலி பிரதேச சபையினர் அடாத்தாகப் பிடித்து, குறித்த காணிக்கு வேலி அடைத்து, “முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்டது” எனப் பெயர்ப் பலகையையும் நாட்டியுள்ளதாகவும் குறித்த காணியில், முசலி பிரதேச சபைக்குச் சொந்தமான சில வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில், காணி உரிமையாளர் தன்னிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த காணிக்கான ஆவணங்கள் அனைத்தும் குறித்த காணி உரிமையாளரிடம் காணப்படுவதாகவும் கூறினார்.
எனினும், முசலி பிரதேச சபை ஏன் இவ்வாறு செயற்பட்டுள்ளது என்பது குறித்து தனக்குத தெரியாதென, அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, குறித்த காணி உரிமையாளர், இது தொடர்பில் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மன்னார் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago