Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இரவு 7 மணிக்கு முன்பாக, அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும், தங்கள் சேவையை முடித்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய வவுனியா நகரசபைத் தவிசாளர் இ.கௌதமன், இதனை மீறும் தனியார்க் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சிரக்கை விடுத்தார்.
வவுனியா நகரசபை அமர்வு, நகரசபை மண்டபத்தில், இன்று (27) நடைபெற்றது. இதன்போதே, தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அங்கு தொடர்ந்துரைத்த அவர், வவுனியா நகரப் பகுதிகளிலுள்ள தனியார்க் கல்வி நிலையங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முடியாதெனவும் இரவு 7 மணிக்கு முன்பாக, அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும், தங்கள் சேவையை முடித்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இது குறித்து, வவுனியாவில் இயங்கிவரும் அனைத்துத் தனியார்க் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago