Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி, மௌனமாக இல்லாது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
250துக்கும்; மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் நீண்ட காலமாக எவ்வித காரணமும் இன்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
குறிப்பாக, விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் பல உயர் மட்டத்தினர், அரசியல் செல்வாக்கினால் அரசின் செல்லப்பிள்ளைகளாக வலம் வரும் நிலையில், நீர் கொடுத்தார்கள், உணவு கொடுத்தார்கள் என்ற குற்றங்களைச் சாட்டி பொய்யான வாக்குமூலங்களின் மூலமாக இன்று இவர்கள் சிறையில் வாடுகின்றர்.
விடுதலை கோரிய தமிழ் அரசியல் கைதிகள், பல்வேறான போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் எதுவும் சாத்தியமற்றுப்போயுள்ள நிலையில் 'நல்லாட்சி' என்ற தொனிப்பொருளில் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நம்பியே தமிழர்கள் வாக்களித்திருந்தனர்.
எனினும், அரசு பதவியேற்று பல மாதங்களாகியபோதிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான செய்தியை வெளியிட்டு, உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தியிருந்த போதிலும் அதன் பின்னர் ஜனாதிபதி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மௌனம் காத்ததுடன், ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் வெளிக்காட்டவில்லை.
இவ்வாறான செயற்பாடு ஒரு நாட்டின் தலைவர் மீதுள்ள நம்பிக்கையை, தமிழர்கள் மத்தியில் சிதைக்கும் என்பதுடன், 'நல்லாட்சி' என்ற தத்துவத்துக்கு மாறானதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே ஜனாதிபதி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மௌனம் கலைத்து விரைவான செயற்பாடுகளை முன்னேடுத்து இளமைக்காலத்தை சிறையில் கழிக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளின் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கோருகின்றேன்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago