2025 மே 19, திங்கட்கிழமை

தமிழரசுக் கட்சியின் 70ஆது ஆண்டு நிறைவு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆது ஆண்டு நிறைவு விழாவும் கட்சியின் மூத்தத் தொண்டர்கள் மதிப்பளிப்பு விழாவும், கிளிநொச்சி மாவட்டக் கூட்டுறவுச்சபை மண்டபத்தில், நாளை மறுதினம் (28) முற்பகல் 9.30 மணிக்கு நடைபெறவுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, “தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடியும் எதிர்காலமும்” எனும் தலைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கமும் “எங்கள் இனத்துக்குத் தலைமை தாங்க, இன்றைய இளையோர் தகுதியுடையோரே” எனும் தலைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.சர்வேஸ்வராவும் சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X