2025 மே 22, வியாழக்கிழமை

‘தமிழர் அரசியல் 3 வகைப்படும்’

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தமிழ் மக்களின் அரசியலானது, பணப்பொட்டி அரசியல், சவப்பெட்டி அரசியல் யதார்த்த அரசியல் என மூன்று வகையான பார்வையைக் கொண்டதென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில், இன்று (29) நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், விரைவான தேர்தலொன்றுதான், நாட்டையும் மக்களையும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும் பணப்பெட்டி அரசியல் கட்சிக்கே, தமிழ் மக்கள் தமது அதிகமான ஆதரவை வழங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் மூன்று வகையான பார்வையைக் கொண்டதெனத் தெரிவித்த அவர், அவையாவன; பணப்பொட்டி அரசியல், சவப்பெட்டி அரசியல், யதார்த்த அரசியல் என்பனவாகுமெனவும் கூறினார்.

முதல் இரண்டும், பிரச்சினைகளைத் தீராத பிரச்சினையாக வைத்திருப்பதாகுமெனத் தெரிவித்த அவர், ஆனால் பணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல்வாதிகளிடம் இல்லையெவும் கூறினார்.

அவர்களின் கொள்கை என்பது, உளரல், உசுப்பேற்றுவதுமேயாகுமெனவும் அவர்களிடத்தில், தமது இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டம் எதுவும் இல்லையெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .