Editorial / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்லவெனத் தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதற்கு அப்போதைய அரசியல் தலைமைகளே காரணமெனவும் குற்றஞ்சாட்டினார்.
கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவரெனவும் கீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும்தான் மேல் பாட்டுக்கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டாரெனவும் தெரிவித்தார்.
உண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்லவெனவும் அன்றிருந்த அரசியல் தலைவர்களு முழுக்க முழுக்க காரணமெனவும் கூறினார்.
26 minute ago
37 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago
44 minute ago
1 hours ago