Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் மக்களும், தனது அரசியல் பயணத்தில் இணைந்துகொண்டு பலம் சேர்த்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து, கிறிஸ்தவ, பௌத்த மத சகோதரர்களும் மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு வலுவூட்டி வருவதாகவும் கூறினார்.
மன்னார் அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற "மதி நா" புத்தக வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மெற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மீள்குடியேற்றம் என்பது அப்போது இலகுவாக இருக்கவில்லையெனவும், இந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கான எந்தவிதமான வசதிகளும் இருக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இந்தப் பிரதேசம் இப்போது பாரிய மாற்றங்களை கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அரசியலில் தாம் தாக்குப்பிடிப்போமா என்று கூட அப்போது சிந்தித்ததுண்டெனவும் கூறினார்.
எனினும், தம்மைப் பொறுத்தவரையில் விமர்சனகளுக்கு மத்தியிலேயே, அரயிலில் தாக்குப்பிடித்து வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago