Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரில் அமைந்துள் ள பாரதி ஸ்டார் மண்டபத்தில் சனிக்கிழமை (30) மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஸ் பிரேமச்சந்திரன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில், “தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்” என்னும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊடககற்கை, கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம், நினைவுரை நிகழ்த்தினார்.
மேலும், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்தில் சிவாராம்” என்னும் தலைப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உரையாற்றினார்.
வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடக அமைப்புக்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். யாழ். ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட சிவராம் ஞாபகார்த்த விருது, மறைந்த கேலிசித்திர கலைஞன் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதினை யாழ். ஊடக அமையம் முதல் தடவையாக வழங்கியுள்ளது. அதேபோல் இக்கட்டான காலப்பகுதியில் ஊடக பணியாற்றியமைக்காக சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட 7ஊடகவியலாளர்கள், ஊடக அமையத்தினாலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கி கௌரவித்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago