Niroshini / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு, புதன்கிழமை (1) மாலை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தலைமன்னார் வைத்தியசாலையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது என்றார்.
இதன் போது தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேர், பெற்றோர்கள் 3 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.
பாடசாலை மாணவர் ஒருவருக்கு, தலைமன்னார் வைத்தியசாலையில் ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த மாணவருடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 15 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மேலும், குறித்த மாணவர்களுடன் தொடர்புடைய மாணவர்களை, வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago