2025 மே 02, வெள்ளிக்கிழமை

தலைமன்னாரில் ரயில் விபத்துக்கு நீதி கோரி போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலை மன்னார் - பியர் பகுதியில் உள்ள  ரயில் கடவையில், கடந்த 16 ஆம் திகதியன்று  இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்துக்கு நீதி கோரி, தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக, இன்று (22) காலை 7.45 மணியளவில், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,  மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர்  இணைந்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தலைமன்னார் - பியர் பகுதியில் உள்ள ரயில் கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர் , ரயில் திணைக்கள அதிகாரி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்டச் செயலாளர் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .