2025 மே 15, வியாழக்கிழமை

’தலைவரே சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகிறார்’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்றொழிலாளர் சமாசத் தலைவரே, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை, முல்லைத்தீவு செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மீனவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது குறித்த கலந்துரையாடலில் கலந்திருந்த கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர், தான் தனது மீனவர் சங்கத்தின் முடிவின் அடிப்படையிலேயே குறித்த வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் தொழிலைச் செய்வதாக தெரிவித்தார்.

சமாசத் தலைவரின் குறித்த கருத்தினை முற்றாக மறுத்த மீனவர்கள், ஒரு சமாசத் தலைவராக அனைத்து சங்கங்களுக்கும் தலைவராக இருக்கின்ற அவர் கட்டாயமாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றனர்.

“மாறாக சமாசத் தலைவரே சட்டவிரோத வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடிக்கும் தொழிலைச் செய்தால் இந்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது யார்?” எனக் கேள்வி எழுப்பினர்.

இதன்போது சமாசத் தலைவர் மற்றும் மீனவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் வலுத்ததுடன், குறித்த கலந்துரையாடலில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .