2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தளபதியின் கருத்து: ‘இராணுவத்தை நிலைநிறுத்தும் வெளிப்பாடு’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை போருக்குப் பின்னர் அனுபவித்து வருவதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் கருத்து யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு, இவரது இந்தக் கருத்தானது, இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான வெளிப்பாட்டின் செய்தியாகுமெனவும் குறிப்பட்டுள்ளது.

இது குறித்து, கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு, இன்று (06) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழ் மக்கள், தாங்கள் அனுபவித்த சுதந்திரத்தையும் கௌரவத்தையும் 2009க்குப் பின்னர் படிப்படியாக இழந்து வருகின்றனர் என்பதே உண்மையாகுமெனவும் அக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறனதொரு சூழலில் கட்டளைத் தளபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பானதென, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .