Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்தப் பிணையில் செல்லுமாறு, மன்னார் நீதி மன்றம் இன்று (23) அனுமதித்துள்ளது.
மன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் தங்கள் எல்லை தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸார் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாகத் தெரிவித்து, மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கு, இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, மன்னார் நகர சபையின் தவிசாளர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், மன்னார் நகர சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா, மன்னார் நகர சபையின் தவிசாளர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அத்துடன், வழக்கு விசாரணையை, மே மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, நீதவான் உத்தரவிட்டார்.
21 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
3 hours ago