2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாக்குதலுக்கு இலக்கான மாணவனைச் சந்தித்த பொலிஸ் குழு

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் போது, கஞ்சா போதைப்பொருள் விற்பனை குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் வீட்டுக்கு, பொலிஸ் குழுவொன்று, இன்று (27) சென்றுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்க, கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனபால ஆகியோர் அடங்கிய குழுவே, இவ்வாறு சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் மற்றும் பெற்றோருடனும் கலந்துரையாடிய பொலிஸ் அதிகாரிகள், நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

அத்துடன், மாணவனின் பாதுகாப்புக்கு உறுதியளித்த அவர்கள், எந்நேரத்திலும் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு, மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .