2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தாண்டிக்குளத்தில் கனரகவாகனம் குடைசாய்ந்து விபத்து

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – தாண்டிக்குளத்தில்,  இன்று, கால்நடை குறுக்கிட்டதனால் கனரக வாகனம்  குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி கோழி தீவனத்தை  ஏற்றி வந்த கனரக வாகனம், தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏ9 வீதியை குறுக்கிட்ட கால்நடையால் கனரக வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, வாகனத்தில் பயணித்த சாரதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார். கால்நடை ஒன்று உயிரிழந்துள்ளது. 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .